search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி புகார்"

    பாபநாசத்தில் தாய் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயலுக்கு சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள மைக்கேல்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் பிரிட்டோ (வயது 42) இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் தங்கைய்யா நகரைச் சேர்ந்த ரோசி (41) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாத்தூரில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சேவியர் பிரிட்டோ தன் தாய் வீடான மைக்கேல் பட்டிக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் மைக்கேல்பட்டியில் வயலுக்கு சென்ற சேவியர் பிரிட்டோ மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    தகவல் அறிந்து மாத்தூரில் இருந்து மைக்கேல்பட்டி வந்த ரோசி கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 4 வயதில் பெண்குழந்தை உள்ளது. திருவாரூரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அறிவழகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறிவழகன் வீட்டிற்கு வராமலும், பணமும் அனுப்பாமல் இருந்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த மீனா இதுகுறித்து திருப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அறிவழகன் அங்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இதுகுறித்து அறிவழகனிடம் கேட்ட போது வரதட்சணை வாங்கிவந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி அறிவழகன அடித்து துன்புறுத்தினாராம்.

    இதுகுறித்து மீனா திருவாரூர் அனைத்துமகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ஓச்சேரி அருகே கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரையடுத்து, பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    பனப்பாக்கம்:

    ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 29), தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (21). பொன்னையா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சர்மிளா தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இதையடுத்து நேற்று களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்ட பொன்னையாவின் உடலை தோண்டி எடுக்க அவளூர் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொன்னையாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு வந்திருந்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் நரேந்திரகுமார் மற்றும் டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் பொன்னையாவின் உடல் கூறுகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னரே பொன்னையாவின் சாவில் உள்ள உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    லாஸ்பேட்டையில் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதி அடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை மகாவீர் நகர் முதல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வின்சென்ட் சிபியோன், (வயது45). இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணியம்மை (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணியம்மை தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் சிபியோன் வாகனத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக காயம் அடைந்தார். இதையடுத்து காயம் காரணமாக வின்சென்ட் சிபியோன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மணியம்மை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன், மகள் பள்ளிக்கு சென்றனர். வின்சென்ட் சிபியோன் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் காயம் காரணமாக அவதி அடைந்து வந்ததால் மனமுடைந்த வின்சென்ட் சிபியோன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    ஆஸ்பெட்டாஸ் கூரை கம்பியில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். மாலையில் வேலைமுடிந்து வீடு திரும்பிய மணியம்மை கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வின்சென்ட் சிபியோன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர், ஏட்டு முருகதாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு தரனீஷ் (11) என்ற மகனும், கிருத்திகா (9) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்த வெள்ளியங்கிரி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து வெள்ளியங்கிரியின் மனைவி கவிதா, பல்லடம் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:–

    எனது கணவரின் உறவினர்கள் சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் எனது கணவர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கொசவம்பளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே எனது கணவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியும், அவருடைய மகனும், என்னுடைய கணவருடன் தகராறு செய்துள்ளனர். அதன்பின்னர் வீட்டிற்கு வந்த எனது கணவர், மயங்கி விழுந்தார். எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வெள்ளியங்கிரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
    கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாக மனைவி போலீசில் புகார் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாகுறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மங்கைகரசி (26).

    இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த மங்கைகரசி கோபித்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் மங்கைகரசி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் சரவணன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சரவணன் வீட்டுக்கு போலீசார் நேற்று மாலை சென்றனர். வீட்டில் இருந்த சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் சொல்லும் போது போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று சரவணனிடம் போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சரவணன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர், 2-ம் திருமணம் செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிச்செல்வி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    எனக்கும், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 3ம் பவுன் நகையும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

    குழந்தை இல்லாததை காரணம் காட்டி, கூடுதலாக 10 பவுன் மற்றும் பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர்.

    இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்னையும், குழந்தையையும் ஏற்க கணவர் மாரிமுத்து மறுத்துவிட்டார். மேலும் அவர் சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

    இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை மாரிமுத்து 2-ம் திருமணம் செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாரிமுத்து, அவரது பெற்றோர் சுந்தரலிங்கம்-பாப்பா, சகோதரிகள் பொன்னுத்தாய், திலகராணி மற்றும் எலிசபெத்ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    வியாசர்பாடி அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்ற கணவனை மீட்டு தர கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews
    வால்பாறை தொழிலாளி மர்ம சாவு தொடர்பாக தேயிலை தோட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சிறு குன்றா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மில்லர் (52). இவரது மனைவி லில்லி விக்டோரியா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    ஜார்ஜ் மில்லர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் எஸ்டேட் அலுவலகத்துக்கு சம்பளம் வாங்க சென்றுள்ளார்.

    அப்போது இவருக்கும் எஸ்டேட் அதிகாரிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இருவரும் சேர்ந்து ஜார்ஜ் மில்லரை சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த அவர் வால்பாறை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜார்ஜ் மில்லர் மனைவி தனது கணவரை எஸ்டேட் பீல்டு ஆபீசர் ரமேஷ் குமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தாக்கியதாகவும் அதில் தான் தனது கணவர் இறந்ததாகவும் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து எஸ்டேட் அதிகாரிகள் ரமேஷ் குமார், முத்துக்குமார் ஆகியோரிடம் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜார்ஜ் மில்லர் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கருங்கல் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் பல இடங்களில் தேடியும், எங்கும் அவர் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து அமுதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து மாயமான சீனிவாசனை தேடி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம் அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது40). கூலி தொழிலாளி இவரது மனைவி யாசினி. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    சுந்தர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கண்ணங்குளத்தில் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரின் மனைவி யாசினி கண்ணங்குளத்திற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் பிணம் குளத்தில் மிதந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுந்தரின் உடலை போராடி மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×